பிரேசிலை உலுக்கிய தீ விபத்து – 10 பேர் பலி – 13 பேர் படுகாயம்

தெற்கு பிரேசிலின் போர்டோ அலெக்ரே நகரில் உள்ள ஹோட்டலில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 13 பேர் காயமடைந்துள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தீ விபத்தின் போது ஹோட்டலில் சுமார் 30 பேர் இருந்ததாகவும், அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
வீடற்ற மக்கள் மற்றும் அகதிகள் ஒரு குழு இந்த லாட்ஜை பயன்படுத்தி வருவதாக உள்ளூர் அதிகாரிகள் கூறுகின்றனர்.
தீ விபத்துக்கான காரணம் தெரியவராத நிலையில், விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும், தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் மூன்று மணிநேரம் எடுத்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
(Visited 12 times, 1 visits today)