ஹுதி கிளர்ச்சியாளர்களின் ஏவுகணையை சுட்டு வீழ்த்திய இங்கிலாந்து!

ஏடன் வளைகுடாவில் வணிகக் கப்பலை குறிவைத்த ஹுதி கிளர்ச்சியாளர்களின் ஏவுகணையை இங்கிலாந்து போர்க்கப்பல் சுட்டு வீழ்த்தியதாக ராயல் கடற்படை தெரிவித்துள்ளது.
இந்த தாக்குதலை முறியடிக்க HMS Diamond அதன் Sea Viper ஏவுகணை அமைப்பைப் பயன்படுத்தியதாக கூறப்படுகிறது.
யேமனை தளமாகக் கொண்ட ஈரானுடன் தொடர்புடைய ஹூதிகள், செங்கடல் பகுதியில் உள்ள கப்பல்களை குறிவைத்து, தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
இருப்பினும், சமீபகாலமாக தாக்குதல்களின் எண்ணிக்கை குறைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
(Visited 16 times, 1 visits today)