பிலிப்பைன்சில் அதிக வெப்பம் காரணமாக அறுவர் பலி!

தென்கிழக்கு ஆசிய நாடான பிலிப்பைன்சில் கடந்த 3 மாதங்களாகவே வறண்ட வானிலை நிலவி வந்தது. இந்தநிலையில் இந்த மாதம் தொடக்கத்தில் இருந்தே பிலிப்பைன்சில் கடுமையான வெப்ப அலைவீசி வெயில் சுட்டெரிக்கிறது.
நாட்டின் பல்வேறு மாகாணங்களில் இயல்பைவிட அதிக அளவில் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. குறிப்பாக மத்திய பிலிப்பைன்ஸ், சோசிச்கசர்கென் மாகாணம் ஆகிய பகுதிகளில் 110 டிகிரி வரை வெயில் பதிவாகியது. இதனால் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டு ஆன்லைனில் வகுப்புகள் நடத்தப்படுகின்றன.
இந்தநிலையில் வெப்ப தாக்கம் காரணமாக பிலிப்பைன்சில் இந்தாண்டு இதுவரை 6 பேர் உயிரிழந்ததாக அந்த நாட்டின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
(Visited 24 times, 1 visits today)