T20 உலகக் கோப்பைக்கான தூதராக உசைன் போல்ட் நியமனம்
ஜூன் 1 முதல் 29, 2024 வரை மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் அமெரிக்காவில் நடைபெறவுள்ள ஐசிசி ஆடவர் இருபது20 உலகக் கோப்பைக்கான பிராண்ட் தூதராக ஒலிம்பியன் உசைன் போல்ட்டை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) அறிவித்துள்ளது.
புதிய தலைமுறை ரசிகர்களை உற்சாகப்படுத்தும் மிகப்பெரிய கிரிக்கெட் திருவிழா நிகழ்ச்சி தொடங்குவதற்கு சில வாரங்களுக்கு முன் இந்த அறிவிப்பு வெளியாகி இருப்பது சிறப்பு.
2008 பெய்ஜிங் ஒலிம்பிக்கில் உசைன் போல்ட் 100மீ, 200மீ மற்றும் 4×100மீ உலக சாதனை படைத்திருந்தார்.
போல்ட் தற்போது 100 மீ, 200 மீ மற்றும் 4×100 மீ ஓட்டங்களில் 9.58 வினாடிகள், 19.19 வினாடிகள் மற்றும் 36.84 வினாடிகளில் ஓடி உலக சாதனைகளைப் படைத்துள்ளார்.
மேலும் அவரது முதல் உலக சாதனை 100 மீ ஓட்டத்தில் 2008 ஆம் ஆண்டு நியூயார்க்கில் 9.72 வினாடிகளில் ஏற்படுத்தப்பட்டது.
புதிய வாய்ப்பு குறித்து கருத்து தெரிவித்த உசைன் போல்ட் இவ்வாறு தெரிவித்துள்ளார்,
“வரவிருக்கும் ஐசிசி ஆண்கள் டி20 உலகக் கோப்பைக்கான தூதராக இருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். கிரிக்கெட் வாழ்க்கையின் ஒரு பகுதியாக இருக்கும் கரீபியன் தீவுகளில் இருந்து, விளையாட்டு எப்போதும் என் இதயத்தில் ஒரு சிறப்பு இடத்தைப் பிடித்துள்ளது.
மேலும் உலகக் கோப்பையில் மேற்கிந்திய தீவுகள் போட்டிகளில் பங்கேற்று உலகளவில் கிரிக்கெட்டின் வளர்ச்சிக்கு பங்களிக்க ஆவலுடன் காத்திருக்கிறேன்.” என குறிப்பிட்டுள்ளார்.