ஈரானுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு அமெரிக்காவின் எச்சரிக்கை
இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையிலான போருக்கு அமெரிக்கா எவ்வாறு பதிலடி கொடுக்கப் போகிறது என்பதைப் பார்க்க உலகம் தற்போது காத்திருக்கிறது.
ஈரானுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு எதிராக பொருளாதார தடை விதிக்கும் அபாயம் உள்ளதாக அமெரிக்கா இன்று எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி பாகிஸ்தானுக்கான தனது 3 நாள் பயணத்தை முடித்துக் கொண்டு இலங்கைக்கு வந்துள்ளமை விசேட அம்சமாகும்.
அமெரிக்க வெளியுறவுத்துறை துணை செய்தி தொடர்பாளர் வேதாந்த் படேல் கூறுகையில், தற்போதைய ஆபத்து சூழ்நிலையை புரிந்துகொள்வது மிகவும் முக்கியம் என்றார்.
ஈரானுடன் வர்த்தகம் செய்யும் எவரும் அமெரிக்கா விதித்துள்ள தடைகளின் அச்சுறுத்தல் குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என அமெரிக்கா இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.
இதேவேளை, ஈரான் ஜனாதிபதியின் சர்ச்சைக்குரிய கருத்து தொடர்பில் வெளிநாட்டு ஊடகங்களும் செய்தி வெளியிட்டிருந்தன.
ஈரான் மண்ணில் இஸ்ரேல் பெரிய அளவில் தாக்குதல் நடத்தினால், இஸ்ரேல் முற்றாக அழிந்துவிடும் என அந்நாட்டு அதிபர் இப்ராஹிம் ரைசி தெரிவித்துள்ளார்.