இலங்கையில் வேகமாக பரவி வரம் நோய் தாக்கம் : வைத்தியர்கள் விடுத்துள்ள எச்சரிக்கை!

இலங்கையில் 2024 இல் இதுவரை 09 மலேரியா நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக மலேரியா கட்டுப்பாட்டுப் பிரிவின் சமூக வைத்திய நிபுணர் புபுது சூளசிறி, தெரிவித்துள்ளது.
இன்று (24) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அவர், ஆபிரிக்க நாடுகளுக்கு விஜயம் செய்தவர்களிடமே அதிகளவான மலேரியா தொற்றுகள் பதிவாகியுள்ளன.
இலங்கையில் கடைசியாக 2012 ஆம் ஆண்டு மலேரியா நோய் பதிவாகியிருந்த போதிலும் 2023 ஆம் ஆண்டு 62 மலேரியா நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக சமூக மருத்துவ நிபுணர் திரு.புபுது சூளசிறி தெரிவித்தார்.
அந்த நோயாளர்களில் பெரும்பான்மையானவர்கள் அமைதி காக்கும் கடமைகளுக்குச் சென்ற இராணுவத்தினர் மற்றும் இரத்தினக் கற்கள் வர்த்தகம் செய்யச் சென்ற பௌத்தர்கள் என அவர் மேலும் கூறினார்.
(Visited 19 times, 1 visits today)