இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிக்கு எதிராக நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன செயற்படுவதற்கு கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இன்று (24.04) இடைக்காலத் தடையுத்தரவு பிறப்பித்துள்ளது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயற்குழு உறுப்பினர் மொண்டகு சரத்சந்திர சமர்ப்பித்த முறைப்பாடு தொடர்பில் கொழும்பு மாவட்ட நீதிபதி சந்துன் விதான இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
விசாரணை முடியும் வரை இந்த நிரந்தர தடை அமலில் இருக்கும் என்று உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
(Visited 10 times, 1 visits today)