இலங்கை மின்சார ஊழியர் சங்கத்தினரின் ஆர்ப்பாட்டத்திற்கு எதிராக நீதிமன்றம் தடையுத்தரவு

இலங்கை மின்சார ஊழியர் சங்கம் நாளை (24) பொல்துவ சுற்றுவட்டத்தை அண்மித்து நடத்த ஏற்பாடு செய்துள்ள ஆர்ப்பாட்டத்திற்கு எதிராக பொலிஸார் நீதிமன்ற உத்தரவைப் பெற்றுள்ளனர்.
வெலிக்கடை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
பொல்துவ சுற்றுவட்டத்தை சுற்றி பொதுமக்கள் மற்றும் பாதசாரிகளுக்கு இடையூறு ஏற்படும் வகையில் எந்தவொரு வீதியையும் மறித்து ஆர்ப்பாட்டம் அல்லது வன்முறையில் ஈடுபடுவதை தடை செய்து உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த உத்தரவை மீறும் பட்சத்தில் பொலிஸார் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
(Visited 27 times, 1 visits today)