டிரம்ப் மீது மேலும் குற்றச்சாட்டுகள் – தொடரும் சர்ச்சை
அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனல்ட் டிரம்ப் சதி செய்ததாகவும், சில தகவல்களை மூடி மறைத்ததாகவும் நியூயார்க் வழக்கறிஞர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
அமெரிக்க வரலாற்றில் முன்னாள் ஜனாதிபதி ஒருவருக்கு எதிரான முதல் குற்றவியல் விசாரணையில் வழக்கறிஞர்கள் தங்கள் வாதத்தை முன்வைத்தனர்.
வர்த்தக ஆவணங்களைத் தவறாகக் காட்டியது உட்பட 34 குற்றச்சாட்டுகளை டிரம்ப் எதிர்நோக்குகிறார்.
அனைத்து குற்றச்சாட்டுகளையும் நிராகரிக்கும் டிரம்ப், விசாரணை தேர்தல் தலையீடு என்கிறார்.
இவ்வாண்டு நவம்பர் மாதம் நடைபெறவிருக்கும் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் தமது வெற்றி வாய்ப்பைத் தட்டிப் பறிக்க முயற்சிகள் நடப்பதாக அவர் கூறுகிறார்.
(Visited 9 times, 1 visits today)