சீனாவை உலுக்கிய வெள்ளம் -10 பேர் பலி – 100,000 பேர் வீடுகளை விட்டு வெளியேற்றம்
சீனாவின் குவாங்டோங் மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 4 பேர் உயிரிழந்துள்ளனர். 10 பேரைக் காணாமல் போயுள்ளனர்.
குவாங்டோங் மாநிலத்தில் கடந்த சில நாள்களாகக் கனத்த மழை பெய்வதால் பல இடங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது.
நிலச்சரிவுகளில் சிக்கியவர்களை மீட்கவும், நிவாரணப் பொருள்களை விநியோகிக்கவும் ஹெலிகாப்டர்கள் பயன்படுத்தப்படுகின்றன.
வெள்ளத்தில் சிக்கியவர்கள் படகுகள் மூலம் மீட்கப்படுகின்றனர். மத்திய-வட பகுதிகளில் பெய் (Bei) ஆற்றின் கரையோரம் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.
100,000துக்கும் அதிகமானோர் வீடுகளிலிருந்து வெளியேற நேர்ந்தது. குவாங்சாவ் (Guangzhou) நகரின் பாயுன் (Baiyun) அனைத்துலக விமான நிலையத்தில் சில விமானச் சேவைகள் ரத்துச் செய்யப்பட்டுள்ளன.
மேலும் சில தாமதமடைந்துள்ளன. 3 நகரங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.
(Visited 17 times, 1 visits today)