இந்தியா செய்தி

இந்தியாவில் அறிமுகமாக உள்ள ஏர் டாக்ஸி சேவை

இண்டிகோவின் தாய் நிறுவனமான இண்டர்குளோப் எண்டர்பிரைசஸ், அமெரிக்காவைச் சேர்ந்த ஆர்ச்சர் ஏவியேஷன் நிறுவனத்துடன் இணைந்து 2026ஆம் ஆண்டுக்குள் இந்தியாவில் மின்சார விமான டாக்ஸி சேவையையும் தொடங்க உள்ளது.

அதன்படி டெல்லியின் கனௌட் பிளேஸ்-இல் இருந்து ஹரியானாவின் குருகிராமிற்கு முதற்கட்டமாக வான்வழி டாக்சி சேவை இயக்கப்பட இருக்கிறது. இந்த சேவை 2026 ஆம் ஆண்டு பயன்பாட்டிற்கு வரவுள்ளது.

வான்வழி டாக்சி சேவையானது பயணிகளை டெல்லியில் இருந்து ஹரியானாவிற்கு (125 கிலோமீட்டர்கள்) ஏழு நிமிடங்களில் அழைத்து சென்றுவிடும்.

இதற்கான கட்டணமாக பயணி ஒருவருக்கு ரூ. 2 ஆயிரத்தில் துவங்கி அதிகபட்சம் ரூ. 3 ஆயிரம் வரை வசூலிக்கப்பட இருக்கிறது.

இந்தியாவில் வான்வழி டாக்சி சேவையை கொண்டு வருவதற்காக இன்டர்குளோப் என்டர்பிரைசஸ் மற்றும் ஆர்ச்சர் ஏவியேஷன் நிறுவனங்கள் இடையே கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஒப்பந்தம் கையெழுத்தானது.

இந்த ஒப்பந்தத்தின் படி இந்தியாவில் முற்றிலும் எலெக்ட்ரிக் திறன் கொண்ட வான்வழி டாக்சி சேவை அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

மேலும், இந்த சேவையை வழங்குவதற்காக இன்டர்குளோப் நிறுவனம் ஆர்ச்சர் ஏவியேஷன் நிறுவனத்திடம் இருந்து கிட்டத்தட்ட 200 மிட்நைட் டிரோன் விமானங்களை வாங்க இருக்கிறது. இதேபோன்ற சேவை மும்பை மற்றும் பெங்களூரு இடையேயும் அறிமுகம் செய்யப்படுகிறது.

(Visited 7 times, 1 visits today)

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!