பிரித்தானியாவில் பாடசாலை செல்வதை தவிர்க்கும் மாணவிகள்!
இங்கிலாந்தில் மூன்றில் ஒரு பங்கிற்கும் அதிகமான (36%) சிறுமிகள் மாதவிடாய் வலி காரணமாக பள்ளிக்கு சமூகமளிக்கவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெல்பீயிங் ஆஃப் வுமன் அண்ட் சென்சஸ்வைடு என்ற தொண்டு நிறுவனத்தால் நடத்தப்பட்ட ஆய்வில் இந்த தகவல் வெளியாகியுள்ளது.
12 முதல் 18 வயதுக்குட்பட்ட 3,000க்கும் மேற்பட்ட சிறுமிகள் மற்றும் இளம் பெண்களிடம் நடத்திய கருத்துக் கணிப்பு, மாதவிடாய் எந்த அளவுக்கு அவர்களுக்குப் பிரச்சினைகளை ஏற்படுத்துகிறது என்பதை வெளிப்படுத்தியது.
சுமார் 43% பேர், மாதவிடாய் காரணமாக சாப்பிடவோ தூங்கவோ முடியாமல் போய்விட்டதாகக் கூறியுள்ளனர், அதே நேரத்தில் 92% பேர் தங்கள் அன்றாடச் செயல்பாடுகளை மாற்றிக் கொள்ள வேண்டும் என்று கடுமையான இரத்தப்போக்கு ஏற்பட்டதாகக் கூறியுள்ளனர்.
(Visited 7 times, 1 visits today)