பிரான்ஸில் கையடக்க தொலைபேசிக்காக நடந்த கொடூரம்

பிரான்ஸின் – மார்செய் நகரில் கையடக்க தொலைபேசிக்காக கத்திக்குத்துத் தாக்குதல் ஒன்று நடாத்தப்பட்டுள்ளது.
மார்செய் நகரின் 3வது பிராந்தியத்தில், மார்செய் நகரின் மாநகரசபை ஆலோசகர் மீது, ஒரு நபர், கத்தியால் பல குத்துக்கள் குத்திவிட்டு, அவரின் கையடக்க தொலைபேசியையும்அவரின் பையையும் திருடிச் செல்லப்பட்டுள்ளது.
இந்தப் பெண் மாநகரசபை ஆலோசகரிற்கு மார்பிலும் கைகளிலும் பலத்த கத்திக்குத்துக்கள் குத்தப்பட்டுள்ளன. இவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுள்ளார்.
ஆயுதத் தாக்குதலுடன் வன்முறையுடன் கூடிய இந்தத தாக்குதலின் விசாரணை சிறப்புக் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
(Visited 26 times, 1 visits today)