சிங்கப்பூரில் இணையத்தில் கசிந்த ஆசிரியர்கள், பெற்றோரின் தனிப்பட்ட தரவுகள்
சிங்கப்பூரில் ஆசிரியர்கள், பெற்றோரின் தனிப்பட்ட தரவுகள் இணையத்தில் கசிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சிங்கப்பூரில் மாணவர்களின் தனிப்பட்ட கற்றல் சாதனங்களில் உள்ள செயலி ஊடுருவப்பட்டதாகக் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
Mobile Guardian எனும் செயலி ஊடுருவப்பட்டதில் 127 பாடசாலைகளின் ஆசிரியர்கள், பெற்றோரின் தனிப்பட்ட விவரங்கள் கசிந்ததாக அமைச்சு கூறியது.
அவற்றில் 122, உயர்நிலைப் பாடசாலைகளாகும். எஞ்சிய ஐந்து ஆரம்ப பாடசாலைகளாகும்.
ஆசிரியர்கள், பெற்றோரின் பெயர்கள், மின்னஞ்சல்-முகவரிகள் கசிந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
Mobile Guardian, அதன் செயலி ஊடுருவப்பட்டதாக தெரியவந்துள்ளது.
ஊடுருவல் சம்பவம் பிரித்தானியாவில் உள்ள நிறுவனத்தின் தலைமையகத்தில் நிகழ்ந்தது.
மாணவர்கள் சாதனங்களைப் பயன்படுத்துவதைப் பெற்றோர் நிர்வகிப்பதற்குச் செயலி உதவுவதாக தெரிவிக்கப்படுகின்றது.