WhatsAppஇல் அறிமுகமாகும் புதிய அம்சம்
மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான வாட்ஸ்அப் புதிதாக ‘பில்டர்ஸ்’ என்ற அம்சத்தை செவ்வாய்கிழமை அறிமுகம் செய்தது.
இதன் மூலம் தனிநபர் மற்றும் குரூப் ஷேட்களை எளிதாக organise செய்து பார்க்க முடியும். இந்த அம்சம் ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோன் பயனர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
நியூ பில்டர்ஸ் அம்சத்தில் All, Unread மற்றும் Group மெசேஜ்கள் என்ற ஆப்ஷன் கொடுக்கப்பட்டிருக்கும்.
இதன் மூலம் தனித்தனியாக மெசேஜ்களை படிக்கலாம். வாட்ஸ்அப் ஹோம் ஸ்கிரின் பக்கத்தில் இந்த அம்சம் இடம்பெறுகிறது. தற்போது படிப்படியாக இந்த அம்சம் அனைவருக்கும் அறிமுகம் செய்யப்பட்டு வருகிறது.
இந்த அம்சத்தில் 3 பில்டர்கள் உள்ளன. All, Unread, மற்றும் Groups ஆகும். All பில்டரில் உங்கள் அனைத்து வாட்ஸ்அப் ஷேட்களும் காண்பிக்கும். Unread பில்டரில் நீங்கள் படிக்கத் தவறிய ஷேட் மெசேஜ்கள் இருக்கும். Groups பில்டரில் நீங்கள் உள்ள வாட்ஸ்அப் குரூப் பக்கங்களை காண்பிக்கும். இது பலருக்கும் மிகவும் பயனுள்ள அம்சமாகும்.