சுவிட்சர்லாந்தில் தீவிரவாத சின்னங்களை பயன்படுத்த தடை
சுவிட்சர்லாந்தில் தீவிரவாத சின்னங்களை பயன்படுத்த தடை.!! சுவிஸ் பாராளுமன்ற உறுப்பினர்கள் நாஜி சின்னங்களை தடை செய்ய நடவடிக்கை எடுத்துள்ளனர்.
தேசிய கவுன்சில் நேற்று புதன்கிழமை மாநிலங்களவையின் சட்ட விவகாரக் குழுவின் முன்மொழிவை ஏற்றுக்கொண்டது.
இது சைகைகள், வார்த்தைகள், வணக்கங்கள் அல்லது கொடிகள் என எதுவாக இருந்தாலும், வன்முறையை ஆதரிக்கும் இனவெறிச் சின்னங்கள் மற்றும் பிரச்சாரப் பொருட்களைப் பயன்படுத்துதல், அணிதல் மற்றும் பொது விநியோகம் செய்வதைத் தடைசெய்வதை நோக்கமாகக் கொண்டது.
‘தீவிரவாத சின்னங்கள் அல்லது சைகைகளை சகித்துக்கொள்பவர்கள் இனவெறியையும் வெறுப்பையும் சகித்துக்கொள்கிறார்கள்.
என்று துணை எம்.பி பிலிப் கூறினார். இந்த நடவடிக்கையானது கருத்துச் சுதந்திரத்தை கட்டுப்படுத்துவதாக அர்த்தமல்ல மாறாக, இந்த அச்சுறுத்தல்களால் பாதிக்கப்படக்கூடிய குடிமக்களைப் பாதுகாப்பதாகும் என்று அவர் மேலும் வலியுறுத்தினார்.