ஈரான் மீதான தாக்குதலை தீவிரப்படுத்திய இஸ்ரேல் : தங்கத்தின் விலை சடுதியாக உயர்வு!
இஸ்ரேல், ஈரான் மீது தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து உலக சந்தையில் எரிபொருள் மற்றும் தங்கத்தின் விலை சடுதியாக அதிகரித்துள்ளது.
அத்துடன் இன்றைய (19.04) நாளின் ஆரம்பத்தில் பங்கு சந்தை பாரிய அளவில் வீழ்ச்சியடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
இதன்படி வெள்ளிக்கிழமை காலை ஆசிய சந்தைகளில் ப்ரெண்ட் கச்சா எண்ணெய் பீப்பாய்க்கு 3% உயர்ந்து $90 ஆக இருந்தது, அதே நேரத்தில் தங்கம் ஒரு அவுன்ஸ் $2,400 ஆக இருந்தது.
புதிய விலையானது சமீபத்தில் பதிவான அதிகபட்ச விலையாக பார்க்கப்படுகிறது. ஜப்பான், ஹாங்காங், தென்கொரியா ஆகிய நாடுகளின் பங்குச் சந்தைகளும் சரிந்துள்ளதாக கூறப்படுகிறது.
பங்குச் சந்தை முதலீட்டாளர்கள் மத்திய கிழக்கில் வளர்ந்து வரும் போரை நன்கு அறிந்துள்ளனர்.
(Visited 7 times, 1 visits today)