ஜெர்மனியில் இருந்து ஆயிர கணக்கானோர் நாடு கடத்தல் – அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை
ஜெர்மனியில் அகதி விண்ணப்பங்கள் மேற்கொண்டு நிராகரிக்கப்பட்டவர்களில் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
1700 பேர் நாடு கடத்தப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த ஆண்டு ஹம்போர்க்கில் மட்டும் அகதி விண்ணப்பங்கள் மேற்கொண்டு நிராகரிக்கப்பட்டவர்களில் 1500 பேர் நாடு கடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இது 2022 ஆம் ஆண்டு உடன் ஒப்பிடும் போது நாடு கடத்தப்பட்டவர்களின் எண்ணிக்கையில் 50 சதவீத வளர்ச்சியை காட்டுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
பெருந்தொகையானனோர் நாடு கடத்த தயார் நிலையில் உள்ள போதும், மனித உரிமைகள் அமைப்பினால் கடும் அழுத்தம் பிரயோகிக்கப்படுவதால் அது தாமதப்பட்டு வருகிறது.
அற்கமைய, கடந்த ஒருவருட காலப்பகுதிக்குள் 1403 பேர் நாடு கடத்தப்படதாகவும், 426 நாடு கடத்தில் முயற்சிகள் தோல்வி அடைந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
122 நாடு கடத்தல் இடை நிறுத்தப்பட்டதாக தன்னார்வ அமைப்பு ஒன்று புள்ளிவிபரங்களுடன் தெரிவித்துள்ளது.