குருநாகல் – வியாபாரி ஒருவர் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு கொலை
குருநாகல், ரிதிகம பிரதேசத்தில் வியாபாரி ஒருவர் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.
இந்த கொலை சம்பவம் நேற்று (17) இரவு இடம்பெற்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
படுகொலை செய்யப்பட்ட நபரின் சடலம் இன்று காலை தனியார் காணி ஒன்றில் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர் அதே பிரதேசத்தை சேர்ந்த 49 வயதுடைய கோழி இறைச்சி விற்பனையாளர் என தெரியவந்துள்ளது.
கொலையை செய்த சந்தேகநபர்கள் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என்பதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ரிதிகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.





