மன்சூர் அலிகான் மருத்துவமனையில் அனுமதி!

நடிகரும், வேலூர் மக்களவைத் தொகுதி வேட்பாளருமான மன்சூர் அலிகான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்திய ஜனநாயக புலிகள் கட்சியின் தலைவரும், நடிகருமான மன்சூா் அலிகான் வேலூர் மக்களவைத் தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக பலாப்பழம் சின்னத்தில் போட்டியிடுகிறார்.
இவர், தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது உடல்நலக் குறைவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனிடையே, வேலூரில் உள்ள மருத்துவமனையில் மன்சூர் அலிகான் அனுமதிக்கப்பட்டு இருந்தார்.
இந்நிலையில், சென்னைக்கு ஆம்புலன்ஸுல் அழைத்து வரப்பட்டு கே.கே. நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
(Visited 19 times, 1 visits today)