ஈஸ்டர் தாக்குதல் குறித்து வேண்டுகோள் விடுத்த இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன்

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான உண்மைகளை முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எதிர்வரும் பாராளுமன்ற அமர்வுகளில் வெளிப்படுத்தவேண்டும் எனவும் காலநீடிப்பு இல்லாமல் விரைவாக முன்னெடுக்கப்பட வேண்டும் எனவும் இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இன்று மட்டக்களப்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இந்தியா இலங்கைக்கு முக்கியமானது நாடு எனவும் அந்த உறவில் விரிசல்கள் ஏற்படாத வகையில் எமது செயற்பாடுகள் முன்னெடுக்கப்படவேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.
(Visited 18 times, 1 visits today)