குடிமக்களை கண்காணிக்க அவர்களின் தரவுகளை சேகரிக்கும் வடகொரியா!
வட கொரியா பள்ளிகள் மற்றும் பணியிடங்களில் கண்காணிப்பு கேமராக்களை வைத்து, அதன் குடிமக்களிடமிருந்து கைரேகைகள், புகைப்படங்கள் மற்றும் பிற பயோமெட்ரிக் தகவல்களை சேகரிக்கிறது,
அதன் மக்கள்தொகையை இன்னும் நெருக்கமாக கண்காணிக்க மேற்படி நடவடிக்கை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
எவ்வாறாயினும் அந் நாட்டின் டிஜிட்டல் லட்சியங்கள் மோசமான மின்சாரம் மற்றும் குறைந்த நெட்வொர்க் இணைப்புடன் போராட வேண்டும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
வட கொரியத் தலைவர் கிம் ஜாங் உன் குடிமக்கள் மீதான அரசின் கட்டுப்பாட்டை இறுக்கி, தனது ஆட்சிக்கு விசுவாசத்தை மேம்படுத்துவதற்கான முயற்சிகளை முடுக்கிவிடுகிறார் என்ற பரவலான கருத்துக்களுடன் ஆய்வின் கண்டுபிடிப்புகள் ஒத்துப்போகின்றன.
(Visited 6 times, 1 visits today)