பாகிஸ்தானில் கனமழை மற்றும் மின்னல் தாக்கத்தால் 36 பேர் பலி!
பாகிஸ்தானில் மின்னல் மற்றும் கனமழை காரணமாக ஏறக்குறைய 36 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு உயிரிழந்தவர்களில் பெரும்பாலானவர்கள் விவசாயிகள் எனத் தெரிவிக்கப்படுகிறது. அதாவது கோதுமை அறுவடை செய்யும் விவசாயிகள் மீது மின்னல் தாக்கியதில் பெரும்பாலான இறப்புகள் பதிவாகியதாக கூறப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து அந்நாட்டு அரசாங்கம் அவசர நிலையை அறிவித்துள்ளது. அத்துடன் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரண உதவிகளை வழங்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானைச் சேர்ந்த சுற்றுச்சூழல் நிபுணர் ரஃபே ஆலம் கூறுகையில், ஏப்ரல் மாதத்தில் இதுபோன்ற அதிக மழைப்பொழிவு அசாதாரணமானது எனத் தெரிவித்துள்ளார்.
(Visited 19 times, 1 visits today)





