ரஷ்யா கைப்பற்றிய பகுதியில் உக்ரைன் தாக்குதல் – 16 பேர் பலி!

ரஷ்ய படைகள் கைப்பற்றிய பகுதியில் உக்ரைன் ராணுவம் நடத்திய தாக்குதலில் 16 பேர் பலியாகியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ரஷ்யாவின் படைகளால் கைப்பற்றப்பட்ட தெற்கு சபோரிஜியாவின் டோக்மாக் பகுதியில் தாக்குதல் நடத்தப்பட்டது.
ரஷ்யாவுக்கு சொந்தமான இந்த பகுதியை குறிவைத்து உக்ரைன் ஷெல் தாக்குதலை நடத்தியது.
தாக்குதலில் மேலும் 20 பேர் காயமடைந்துள்ளதாகவும் அவர்களில் 12 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் தெரிவித்துள்ளன.
(Visited 20 times, 1 visits today)