ஜெர்மனியில் உதவி பணம் பெறுபவர்களுக்கு முக்கிய தகவல்
ஜெர்மனியில் சமூக உதவி பணமானது வருட ஆரம்பத்தில் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பாடசாலை மாணவர்களுக்கு பாடசாலைக்குரிய உபகரணங்களை வேண்டுவதற்காக 12 சதவீதமான உயர்ச்சியை அரசாங்கம் அறிவித்துள்ளதாக தெரியவந்துள்ளது.
அதாவது பாடசாலை மாணவர்கள், 25 வயதுக்கு உட்பட்டவர்கள் சமூக உதவி பணத்தை பெற்றுக்கொள்ளகின்றார்கள்.
இவ்வாறு பெற்றக்கொண்டால் தங்களது பாடசாலை உபகரணங்களை வேண்டுவதற்காக மொத்தமாக 195 யுரோக்களை இவர்கள் சமூக உதவி திணைகளத்தில் விண்ணப்பம் செய்து பெற முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பாடசாலை மாணவர்கள் இவ்வாறு பாடசாலைக்கு செல்லும் பொழுது முதலாவது அறை ஆண்டில் 130 யூரோக்களை பெற்றுக் கொள்ளலாம் என்றும்,
2வது அறையாம் ஆண்டில் 65 யூரோக்களை பெற்றுக்கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது பாடசாலை உபகரணங்களை கொள்வனவு செய்வதற்காக இவர்கள் விண்ணப்பம் செய்ய முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.