பாகிஸ்தானில் 08 பேர் துப்பாக்கி முனையில் கடத்தப்பட்டுள்ளதாக அறிவிப்பு!
பாகிஸ்தானின் தென்மேற்குப் பகுதியில் உள்ள நெடுஞ்சாலையில் பேருந்து ஒன்றில் இருந்து எட்டு பேரைக் கடத்திச் சென்ற துப்பாக்கி ஏந்தியவர்களைக் பொலிஸார் தேடி வருவதாக அறிவித்துள்ளனர்.
குறித்த சம்பவம் நேற்று (12.04) இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் துணை ஆணையர் ஹபிபுல்லா மொசக்கைல் கூறுகையில், துப்பாக்கி ஏந்திய நபர்கள் முற்றுகையை ஏற்படுத்தினர், பின்னர் பேருந்தை நிறுத்தி பயணிகளின் அடையாள அட்டைகளை ஆய்வு செய்தனர்.
கிழக்கு பஞ்சாப் மாகாணத்தைச் சேர்ந்த 8 பேரை மலைப்பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளதாக தெரிவித்துள்ளார்.
நெடுஞ்சாலையில் இருந்து 5 கிலோமீட்டர் (3 மைல்) தொலைவில் உள்ள பாலத்தின் அடியில் எட்டு உடல்களை பொலிஸார் மீட்டுள்ளனர். குற்றவாளிகளைத் தேடும் பணி நடைபெற்று வருவதாக மொசக்கைல் தெரிவித்துள்ளார்.
பலுசிஸ்தானில் கடத்தல்கள் அரிதாகவே நடைபெறுகின்றன, அங்கு தீவிரவாதிகள் பொதுவாக போலீஸ் படைகள் மற்றும் ராணுவ வீரர்கள் அல்லது உள்கட்டமைப்புகளை குறிவைக்கின்றனர்.