கொழும்பில் நபர் ஒருவர் கொடூரமாக கொலை – இருவர் காயம்
மொரட்டுவை, கட்டுபெத்த பிரதேசத்தில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் இருவர் காயமடைந்துள்ளனர்.
கூரிய ஆயுதத்தால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
நீண்ட காலமாக நிலவிய தகராறு காரணமாக இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தாக்குதலில் காயமடைந்த மூவரும் பாணந்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் 28 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கொலைச் சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மொரட்டுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
(Visited 13 times, 1 visits today)





