இலங்கை

இலங்கையில் தொடர்ந்தும் செயற்படுவேன் – மஹிந்த வாக்குறுதி

மக்களின் நம்பிக்கைக்காக தொடர்ந்தும் செயற்படுவேன் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வாக்குறுதியளித்துள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர் டி.வீரசிங்கவினால் அம்பாறை பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்ட புதிய வீட்டினுக்கான பணம் செலுத்தும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே முன்னாள் ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

2022ஆம் ஆண்டு இடம்பெற்ற போராட்டத்தின் போது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் டி.வீரசிங்கவின் அம்பாறை பகுதியில் உள்ள வீடு தீக்கிரையாக்கப்பட்டதுடன், வீடு பாரிய சேதத்திற்கு உள்ளானது.

இதே காணியில் நாடாளுமன்ற உறுப்பினரால் நிர்மாணிக்கப்பட்டுள்ள புதிய வீட்டின் அர்ப்பணிப்பு நேற்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் பொதுஜன பெரமுன உறுப்பினர்களின் பங்களிப்புடன் இடம்பெற்றது.

நேற்றைய தினம் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் பிறந்தநாளும் அங்கு கொண்டாடப்பட்டது.

(Visited 5 times, 1 visits today)

SR

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!