பிரபல நடிகர் அருள்மணி காலமானார்

பிரபல நடிகர் அருள்மணி மாரடைப்பு ஏற்பட்டு அருள்மணி உயிரிழந்தார்.
அருள்மணி நடைபெற இருக்கும் பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கட்சிக்கு ஆதரவாக பிரசாராத்தில் ஈடுபட்டு வந்துள்ளார்.
இந்நிலையில், பிரசாரத்திற்கு இடையில் ஓய்வு எடுத்த போது மாரடைப்பு ஏற்பட்டு அருள்மணி உயிரிழந்துள்ளார் என தமிழக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தமிழ் திரையுலகில் பல்வேறு திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து பிரபலமானவர் அருள்மணி.
நடிப்பு மட்டுமின்றி அரசியல் மற்றும் இயக்குநர் பயிற்சி பள்ளி என பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
(Visited 27 times, 1 visits today)