தென்கொரியாவில் மொத்தமாக பதவி விலகிய ஆளும் கட்சியினர்!
தென் கொரியாவின் பிரதம மந்திரி மற்றும் மூத்த ஜனாதிபதி அதிகாரிகள் தங்கள் பதவியை இராஜினாமா செய்துள்ளனர்.
அவர்களின் பழமைவாத ஆளும் கட்சி பாராளுமன்றத் தேர்தலில் படுதோல்வி அடைந்ததை அடுத்து அவர்கள் இராஜினாமா செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் முடிவுகள் ஜனாதிபதி யூன் சுக் யோலுக்கு பெரும் அரசியல் அடியாக அமைந்தது.
பிரதம மந்திரி ஹான் டக்-சூ மற்றும் யூனின் அனைத்து மூத்த ஜனாதிபதி ஆலோசகர்களும், பாதுகாப்பு பிரச்சினைகளுக்கு பொறுப்பானவர்கள் தவிர, தங்கள் ராஜினாமாவை சமர்ப்பித்ததாக யூனின் அலுவலகம் தெரிவித்துள்ளது.
2022ல் ஒரே ஐந்தாண்டு பதவிக்கு பதவியேற்ற முன்னாள் உயர்மட்ட வழக்கறிஞரான யூன் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்பட்ட நிலையில், தேர்தல் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
(Visited 7 times, 1 visits today)