ஐரோப்பா செய்தி

உள்ளாடைகளை மண்ணில் புதையுங்கள்!!! சுவிஸ் அரசாங்கம் கோரிக்கை

சுவிஸ் அரசாங்கம் மக்களை தங்கள் உள்ளாடைகளை மண்ணில் புதைக்கும்படி கேட்டுக்கொண்டுள்ளது. சுவிஸ் மண்ணின் ஆரோக்கியத்தை மதிப்பிடுவதற்கு இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

‘மண் வாழ்க்கைக்கு இன்றியமையாதது. அவை உணவு உற்பத்தியை உறுதி செய்கின்றன. தண்ணீரை வடிகட்டுகின்றன. மேலும் பெரிய உயிரியல் பன்முகத்தன்மைக்கு உதவுகின்றது என்று மத்திய சுற்றுச்சூழல் துறை அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.

‘இலக்கின் அடிப்படையில் மண்ணைப் பாதுகாக்க, அவற்றின் தரம் மற்றும் அவை வழங்கும் சேவைகள் பற்றிய கூடுதல் தகவல்களை நாங்கள் சேகரிக்க வேண்டும்,’ எனவும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏப்ரல் 21 மற்றும் 22 ஆகிய திகதிகளில் நடைபெறும் இந்த திட்டத்தில் பங்கேற்க, உங்களுக்கு தேவையானது இந்த ஆப்ளிகேசன், முற்றிலும் பருத்தியால் செய்யப்பட்ட ஒரு ஜோடி உள்ளாடைகள் மற்றும் அதை புதைக்க ஒரு மண்வெட்டி.

இரண்டு மாதங்களுக்குப் பிறகு நீங்கள் உங்கள் உள்ளாடைகளை தோண்டி எடுத்த பிறகு, அதன் சிதைவின் நிலை மண்ணில் நடைபெறும் உயிரியல் செயல்முறைகள் பற்றிய மதிப்புமிக்க தகவல்களை வழங்கும்.

‘உள்ளாடைகள் முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ சிதைந்திருந்தால், இது மண்ணின் ஆரோக்கியத்திற்கும் உயிர்ச்சக்திக்கும் ஒரு சான்றாகும்.’

இதேபோன்ற திட்டம் 2019 மற்றும் 2021 இல் இடம்பெற்றுள்ளது எனவும் குறித்த செய்திக்குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

(Visited 27 times, 1 visits today)

Jeevan

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி