இந்தோனேஷியாவில் இன்று 6.0 ரிக்டர் அளவில் பதிவான நிலநடுக்கம்

இந்தோனேசியா நாட்டின் மேற்கு பப்புவா மாகாணத்தில் இன்று காலை 7 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது.
அம்மாகாணத்தின் ரன்சிகி நகரை மையமாக கொண்டு 11 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
ரிக்டர் அளவில் 6.0 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் அதிர்ந்தன. இதனால் மக்கள் பீதியடைந்தனர்.
அதேவேளை,நிலநடுக்கம் தொடர்பாக சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை.
இதனிடையே, கடந்த சில நாட்களுக்குமுன் தைவானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 13 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
(Visited 15 times, 1 visits today)