ஆப்கான் அதகிகளை நாடு கடத்தும் பாகிஸ்தான் அரசின் திட்டத்திற்கு எதிர்ப்பு
ஆப்கானிஸ்தானில் இருந்து குடியேறியவர்களை நாடு கடத்தும் திட்டத்தை உடனடியாக ரத்து செய்யுமாறு சர்வதேச மன்னிப்புச் சபை பாகிஸ்தானிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
இருந்த போதிலும், பாகிஸ்தான் தொடர்ந்து ஆப்கானிஸ்தானியர்களை நாட்டிலிருந்து வெளியேற்றினால், அந்த நடவடிக்கை சர்வதேச மனித உரிமைச் சட்டங்களை மீறுவதாகும் என அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
ஆப்கானிஸ்தான் அகதிகளை பாகிஸ்தான் திருப்பி அனுப்பும் திட்டம் சர்வதேச மனித உரிமைகள் சட்டங்கள், சர்வதேச அகதிகள் சட்டங்கள் மற்றும் அனைத்து சர்வதேச மரபுகளையும் மீறுவதாகவும் சர்வதேச மன்னிப்புச் சபை சுட்டிக்காட்டியுள்ளது.
அந்த அகதிகளை தலிபான் ஆளும் ஆப்கானிஸ்தானுக்கு நாடு கடத்துவது மனிதாபிமான பேரழிவு குறித்து பாகிஸ்தான் அதிகாரிகளின் அலட்சியத்தை காட்டுகிறது மற்றும் மனவேதனை அளிக்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தானுக்கு அகதிகள் நாடு கடத்தப்படுவதைத் தடுத்து நிறுத்துவதற்கான உலகளாவிய கோரிக்கைகளுக்கு செவிசாய்ப்பதற்கு பதிலாக, பாகிஸ்தானின் புதிய அரசாங்கம் ஏமாற்றமளிக்கும் வகையில் செயல்படுவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
புதிய அரசாங்கம் ஆப்கான் குடியுரிமை அட்டை வைத்திருப்பவர்களையும் நாடு கடத்துவதாக சர்வதேச மன்னிப்புச் சபை சுட்டிக்காட்டியுள்ளது.