இலங்கை

இலங்கை: பல வகையான அத்தியாவசியப் பொருட்களின் விலை குறைப்பு

புதுவருடத்தை முன்னிட்டு லங்கா சதொச நிறுவனம் பல வகையான அத்தியாவசிய நுகர்வுப் பொருட்களின் விலைகளைக் குறைத்துள்ளது.

இந்த விலை குறைப்பு இன்று (08) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த விலைகள் குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதற்கமைய 1 கிலோ செத்தல் மிளகாய் 300 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன் புதிய விலை 850 ரூபாவாகும்.

சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் 1 கிலோ வெங்காயத்தின் விலை 120 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 375 ரூபாவாகும்.

அத்துடன் இந்தியா மற்றும் பாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யப்படும் வெங்காயத்தின் விலை 50 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 445 ரூபாவாகும்.

1 கிலோ வௌ்ளைபூடு 15 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 680 ரூபாவாகும்.

1 கிலோ உருளைக்கிழங்கு 10 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 165 ரூபாவாகும்.

அத்துடன் சிகப்பு பருப்பின் விலையை 7 ரூபாவினாலும் வெள்ளை அரிசியின் விலையை 3 ரூபாவினாலும் குறைக்கவும் லங்கா சதொச நிறுவனம் தீர்மானித்துள்ளது.

(Visited 18 times, 1 visits today)

TJenitha

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்