கொழும்பில் நபர் ஒருவரை சுட்டுக்கொலை செய்த பொலிஸார்

பாதுக்க, அங்கமுவ பிரதேசத்தில் பொலிஸ் வீதித் தடைக்கு அருகில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இன்று அதிகாலை 04.30 மணியளவில் வீதித்தடையில் இருந்த பொலிஸ் உத்தியோகத்தர்களை நோக்கி மோட்டார் சைக்கிளில் வந்த நபர் ஒருவர் துப்பாக்கிப் பிரயோகம் செய்துவிட்டு தப்பிச் செல்ல முயன்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பொலிஸ் உத்தியோகத்தர்களின் பதில் தாக்குதலில் காயமடைந்த சந்தேக நபர் பாதுக்க வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அவர் விமானப்படை வீரர் என்பது தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பாதுக்க பொலிஸ் நிலையம் ஆரம்பித்துள்ளது.
(Visited 32 times, 1 visits today)