செய்தி

அமெரிக்க அதிகாரிகளிடம் விரக்தியுடன் கத்தி கூச்சலிட்ட இஸ்ரேலிய அதிகாரி

Rafah மீது படையெடுக்கும் இஸ்ரேலின் திட்டங்களை பைடன் நிர்வாகம் பின் தள்ளியதை அடுத்து, உயர்மட்ட இஸ்ரேலிய அதிகாரி ஒருவர், அமெரிக்க அதிகாரிகளிடம் விரக்தியுடன் கத்தியதாக செய்தி வெளியாகியுள்ளது.

இந்த சந்திப்பு தொடர்பில் நன்கு அறிந்த அதிகாரிகளால் ஊடகங்களுக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.

இது எளிதான உரையாடல் அல்ல எனவும், 1.5 மில்லியன் மக்கள் தற்போது வசிக்கும் தெற்கு நகரத்திலிருந்து பொதுமக்களை வெளியேற்றுவதற்கான விரிவான திட்டத்தை வழங்குமாறு இஸ்ரேலை அமெரிக்கா கேட்டுக் கொண்டதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

அமெரிக்க அதிகாரிகளை மேற்கோள் காட்டிய ஊடகம் இஸ்ரேலின் மூலோபாய விவகாரங்களுக்கான அமைச்சர் ரான் டெர்மர், நகரத்தின் மீது தரைவழிப் படையெடுப்பைத் தொடங்குவதற்கான திட்டங்களைப் பாதுகாக்கும் போது, கத்தவும், கைகளை அசைக்கவும் தொடங்கினார்

கூட்டத்தில் அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன் மற்றும் அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் ஆண்டனி பிளிங்கன் ஆகியோர் கலந்துகொண்டனர், அவர்கள் “அமைதியாக இருந்தனர்” என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

இருப்பினும், ஒரு இஸ்ரேலிய அதிகாரி, அறையில் என்ன நடந்தது என்பதை தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். கருத்து வேறுபாடுகளின் போது கூட ஆக்கப்பூர்வமாகவும் மரியாதைக்குரியதாகவும் இருந்தது. எந்த நேரத்திலும் கூச்சல் இல்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

(Visited 8 times, 1 visits today)

SR

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி