ஜாம்பியாவில் சஃபாரி வாகனத்தை தாக்கிய யானை : அமெரிக்க பெண்மணி உயிரிழப்பு!
ஜாம்பியாவில் சஃபாரி வாகனத்தை யானை ஒன்று தாக்கியதில் அதில் பயணித்த 80 வயதான அமெரிக்க பெண்மணி உயிரிழந்துள்ளார்.
5 டன் எடையுள்ள குறித்த யானை வாகனத்தை பலமுறை தாக்கியதாக தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பான காணொலி ஒன்றும் பதிவாகியுள்ளது.
சம்பவத்தில் உயிரிழந்தவர் அடையாளம் காணப்படவில்லை. இருப்பினும் அவர் வைல்டர்னஸ் சாம்பியா குழுவில் உள்ள ஆறு சுற்றுலாப் பயணிகளில் ஒருவர் என இனங்காணப்பட்டுள்ளார்.
குறித்த குழுவில் பயணித்த ஆறு பேரில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், ஐவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பாதிக்கப்பட்டவர்களை வெளியேற்றுவதற்காக கஃபு தேசிய பூங்கா நிர்வாகத்தால் ஹெலிகாப்டர் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
(Visited 18 times, 1 visits today)





