லண்டனில் தமிழர்கள் அதிகம் வாழும் பகுதியில் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் பொருட்கள் விற்பனை
லண்டனில் தமிழர்கள் அதிகம் வாழும் Hayes பகுதியில் உள்ள கடை ஒன்றில் பொது மக்களின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
Hillingdon ஆணைக்குழுவின், வர்த்தக தரநிலை அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணையைத் தொடர்ந்து பாதுகாப்பற்ற பொருட்களை விற்றதற்காகவும் குடியிருப்பாளர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தியதற்காகவும் Hayes பகுதி கடைக்காரர் மீது வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
AG Food and Wine Limited வர்த்தகத்தின் இயக்குனர் அமர்ஜித் சிங் என்பவர் Uxbridge நீதிவான் நீதிமன்றத்தில் தனக்கு எதிரான குற்றச்சாடுகளை ஒப்புக்கொண்டார்.
அதற்கமைய, பாதுகாப்பற்ற அழகுசாதனப் பொருட்கள் மற்றும் இலத்திரனியல் பொருட்களை விற்பனை செய்ததற்காக 4,400 பவுண்டுகளுக்கு மேல் அபராதம் செலுத்த உத்தரவிடப்பட்டது.
இது தொடர்பான விசாரணையில் கடையில் 12 இணங்காத மருதாணி முடி சாயப் பொருட்கள் இருப்பது கண்டறியப்பட்டது.
அமர்ஜித் சிங் இந்த தயாரிப்புகளில் 1,900 க்கும் மேற்பட்டவற்றை இறக்குமதி செய்துள்ளதாக கொள்முதல் விலைப்பட்டியல் காட்டுகிறது.
தலைக்கு பயன்படுத்தும் சாயத்தில் போதுமான லேபிள் இல்லை, தவறான பொருட்கள் உள்ளடக்கப்பட்டிருத்தல், காலாவதி திகதி இல்லை, பாதுகாப்பான பயன்பாட்டிற்கான போதிய அறிவுறுத்தல்கள் இல்லை மற்றும் தயாரிப்பு பாதுகாப்பு மதிப்பீடுகளுக்கு உட்பட்டதாகக் காட்டும் தகவலைக் கொண்ட தயாரிப்பு தகவல் கோப்பு இல்லை என விசாரணைகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மேலும் அமர்ஜித் சிங் பொருட்களை அழிக்க முந்தைய அறிவுறுத்தல்களைப் பின்பற்றத் தவறிவிட்டார் என்று நீதிமன்றம் கண்டறிந்தது.
இதேவேளை, பிரித்தானியாவில் பயன்பாட்டில் இல்லாத தரநிலை மிள்சாரதனம் பொருத்தும் plugs மற்றும் தீயை ஏற்படுத்தும் திறன் கொண்ட தவறான வயரிங் ஆகியவற்றுடன் 32 பாதுகாப்பற்ற மின் தயாரிப்புகள் விற்பனையில் இருந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அழகுசாதனப் பொருட்கள் மற்றும் இலத்திரனியல் பொருட்கள் இரண்டிலும் பிரித்தானிய இறக்குமதியாளர் அல்லது விநியோகஸ்தரின் பெயர் மற்றும் முகவரி இல்லை, இது விதிமுறைகளில் கட்டாயமாக உள்ளது.
இந்த அனை்தது குற்றச்சாட்டுகளுக்காகவும் அமர்ஜித் சிங் 4,463 பவுட் செலுத்த நீதிமன்றம் உத்தரவிடப்பட்டுள்ளது.