யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தை தனியாருக்கு வழங்க தீர்மானம்

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தை தனியாருக்கு குத்தகைக்கு வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இதன்படி, உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களிடமிருந்து கேள்விப்பத்திரங்கள் கோரப்பட்டுள்ளதாக துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.
பொருத்தமான முதலீட்டாளரைத் தெரிவு செய்த பின்னர் மேலதிக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
இதேவேளை, மத்தல விமான நிலையத்தின் செயற்பாடுகளை இந்தியா மற்றும் ரஷ்யாவில் உள்ள இரண்டு நிறுவனங்களுக்கு வழங்குவதற்கான பிரேரணை
நிதி அமைச்சின் அவதானத்துக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
(Visited 13 times, 1 visits today)