இந்தியா செய்தி

போதை உதயநிதி என்று அழைப்போம் – அண்ணாமலை பேட்டி.

கோவை பாஜக பாராளுமன்ற வேட்பாளர் அண்ணாமலை கோவை தெப்பக்குளம் மைதானத்தில் பிரச்சாரம் மேற்கொண்டார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளரிடம் பேசிய அண்ணாமலை,தேர்தல் களம் போல் கோவை சூடாக உள்ளது.

உள்துறை அமைச்சர் அமித்ஷா ,நாளை மற்றும் நாளை மறுநாள் தமிழகம் வருகிறார். தேனி, மதுரை சென்று பிரச்சாரம் மேற்கொள்கிறார்.

நாளை மறுநாள் சிவகங்கை, தென்காசி, கன்னியாகுமாரி செல்கிறார்.பிரதமர் குறுகிய காலத்தில் தமிழக வர உள்ளார்.சீமான் தினம் ஒரு வார்த்தை ,தத்துவோம் என பேசுகிறார்.

டெல்லியில் சீமான் அப்பளை செய்யாமல் சின்னம் கிடைக்காததால் கோபத்தில் பேசுகிறார்.அவர் தவறு செய்து விட்டு எங்கள் மீது பலி போடுகிறார்.

முதல்வர் அப்போ அப்போ தமிழகத்தில் எட்டி பார்க்கிறார்.நேரடியாக முதல்வர் களத்திற்கு வராததினால் கொள்ளையடிப்பது மட்டும் முழு வேலையாக அமைச்சர்கள் பார்க்கிறார்கள்.

பிரதமரின் ரோட்ஷோ முக்கிய நகரத்தில் நடக்க உள்ளது.பிரதமர் உழைக்க கூடிய செயலை தமிழக முதல்வர் செய்யவில்லை.

பணம் அதிகமாக உள்ளவர்களிடம் வருமான வரித்துறை சோதனை மேற்கொள்கின்றனர்.2024 ல் பொய் வேசம் போடுகின்றனர் திமுக.கச்சத்தீவு நாங்கள் கையில் எடுத்த பின்பு மக்களுக்கு உண்மை தெரிந்துள்ளது.ஜனநாயக கடமையை செய்துள்ளோம்.மீனவ மக்களுக்கு 50 ஆண்டுகளுக்கு பின்பு உண்மை தெரிந்துள்ளது.

தந்தை பெயர் , தாத்தா பெயர் , வைத்துகொண்டு கொச்சையாக பேசுவது உதயநிதி, தமிழக மக்கள் தகுந்த பதிலடி தருவார்கள்.ட்ரக்( போதை) உதயநிதி ஸ்டாலின், என நாளையிலிருந்து கூப்பிடுகிறோம்.

கிராமத்தில் ,நகரத்தில், சம்பாதித்து டி.ஆர்.பி ராஜாவிற்கு வியர்வை சிந்தி இருக்கா?.அவர் அப்படித்தான் பேசுவார்.

வானதி ,அண்ணாமலை,எங்களுக்கு நடிக்க தெரியாது , எல்லா இடங்களிலும் இப்படி தான் பேசுவோம்.இலங்கையை பொறுத்தவரை அவர்கள் பிரச்சனை செய்யவில்லை ,2014 வரை துப்பாக்கி சூடு மீனவர்கள் இறந்தார்கள்,

திமுக எங்கள் மீது பழி சொல்கிறார்கள் ,கச்சத்தீவு குறித்து ஒரு திமுக அமைச்சர் ஆர் டி ஐ ரெக்கார்டு நாங்கள் அடிசோம் என்று சொல்கிறார்கள்,படித்த அமைச்சர்.திமுக பணத்தை வைத்து கொங்கு மண்டலத்தை வென்று விடலாம் என நினைக்கிறார்கள் அது நடக்காது.திருமாவளவன், சீமான் ,தக்காளி தொக்கா?தியாகிகளின் குழந்தைகள் என்ன செய்கிறார்கள், திமுக வெள்ளை அறிக்கை கொடுக்கட்டும்,

அவர்களை வைத்து அரசியல் நடத்தி கொண்டிருக்கிறார்கள்.ஹிந்தி திணித்தது காங்கிரஸ், திமுக நடத்த கூடிய பள்ளியில் ஹிந்தி இல்லை என்று சொல்லுங்கள் ,பிஞ்சு போன செருப்பை போடுகிறார்கள் அவர்கள் என தெரிவித்தார்.

(Visited 7 times, 1 visits today)

KP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி