லண்டனில் நபர் ஒருவர் படுகொலை!
மேற்கு லண்டனில் நபர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். இது தொடர்பான விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.
மேற்கு கென்சிங்டனில் உள்ள கொமேராக் சாலையில் ஏற்பட்ட குழப்பம் குறித்து காவல்துறை மற்றும் லண்டன் ஆம்புலன்ஸ் சேவைக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
இதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் 21 வயதான இளைஞர் ஒருவரை மீட்டதுடன், அவருக்கு சிகிச்சையளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் அவர் உயிரிழந்துவிட்டதாக பொலிஸார் அறிவித்தனர்.
பிரேத பரிசோதனைக்கு பின் சடலத்தை உறவினர்களிடம் கையளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
எவ்வாறாயினும் சம்பவத்துடன் தொடர்புடைய தாக்குதல்தாரி இனங்காணப்படாத நிலையில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
(Visited 10 times, 1 visits today)





