நாய்களின் தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்த சிறுவன் : அதிகாரிகள் விளக்கம்!
கனடாவில் கடந்த திங்கட்கிழமை எட்மண்டன் இல்லத்தில் இரு நாய்களால் தாக்கப்பட்ட 11 வயது சிறுவன் உயிரிழந்த விவகாரம் தொடர்பில் விலங்கு கட்டுப்பாட்டு அதிகாரிகள் விளக்கமளித்துள்ளனர்.
சிறுவன் பலத்த காயம் அடைந்துவிட்டதாகவும், துணை மருத்துவர்கள் வரும் வரை அதிகாரிகள் உயிர்காக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டதாகவும் அவர்கள் தெரிவித்தனர். இருப்பினும் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாக தெரிவித்துள்ளனர்.
சிறுவன் உயிரிழந்தவுடன் அவ்விரு நாய்களும் கைப்பற்றப்பட்டு தற்போது பராமரிப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையத்தில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
இதற்கு முன்பதாக அதாவது கடந்த ஆண்டில் (2023) இவ்வாறான பல சம்பவங்கள் பதிவாகியிருந்தன. இதனைத் தொடர்ந்து ஐந்து பேர் கொண்ட குழு உருவாக்கப்பட்டு கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.