இந்தியாவை தொடர்புபடுத்திய மைத்திரி – இராஜதந்திர நெருக்கடி ஏற்படும் சாத்தியம்
ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதலுடன் இந்தியாவை தொடர்புபடுத்தி முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்டதாக சமகி ஜன பலவேக நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா இன்று தேசிய நாளிதழின் செய்தி ஒன்றை மேற்கோள்காட்டி தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதியின் இந்தக் கூற்று ஒரு இராஜதந்திர நெருக்கடியை கூட உருவாக்கலாம் என நாடாளுமன்ற உறுப்பினர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஈஸ்டர் தாக்குதலை நடத்தியது யார் என்பது எனக்கு தெரியும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்ததை அடுத்து, குற்றப்புலனாய்வு திணைக்களம் அவரிடம் 5 மணிநேர வாக்குமூலம் பதிவு செய்துள்ளது.
இன்று ஆங்கில ‘தேசிய நாளிதழ்’ ஒன்றில் வெளியான செய்தியை மேற்கோள்காட்டி நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தனது நிலைப்பாட்டை தெரிவித்துள்ளார்.