October 22, 2025
Breaking News
Follow Us
இலங்கை

புதுக்குடியிருப்பு உடையார்கட்டு பகுதியில் கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை -இளைஞன் ஒருவர் கைது

புதுக்குடியிருப்பு உடையார்கட்டு குளபகுதியில் கசிப்பு உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் உபகரணங்களுடன், சட்டவிரோதமாக கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டு வந்த இளைஞன் ஒருவரை நேற்று கைது செய்துள்ளதாக புதுக்குடியிருப்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்று (28.03.2024) இரவு 8 மணியளவில் இடம்பெற்ற கைது சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், புதுக்குடியிருப்பு உடையார்கட்டு குளத்தின் அருகிலுள்ள காட்டு பகுதியில் சட்டவிரோதமாக கசிப்பு உற்பத்தி இடம்பெற்று வருவதாக புதுக்குடியிருப்பு பொலிஸ் கொஸ்தாபிள் பிரதீபனுக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து திடீர் சுற்றிவளைப்பு நடவடிக்கையினை மேற்கொண்ட புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலைய மது ஒழிப்புபிரிவு பொறுப்பதிகாரி பொலிஸ் சார்ஜன் (70537) குணவர்த்தன மற்றும் பொலிஸ் கொஸ்தாபல்களான (72485) ஜெயசூரிய, (74996) பணாவர, (88509) பிரதீபன் ஆகிய குறித்த பொலிஸ் குழுவினர் கைது நடவடிக்கையை மேற்கொண்டிருந்தனர்.

கசிப்பு 56,000 மில்லிலீற்றர், 3 பரல்களுக்குள் 75,000 மில்லி மீற்றர் எரிந்த கோடாவும், கசிப்பு உற்பத்தியாக்குவதற்கு பயன்படுத்தப்படும் உபகரணங்களுடனும் உடையார்கட்டு தெற்கு மூங்கிலாறு பகுதியினை சேர்ந்த 23 வயதுடைய சந்தேக நபர் ஒருவரையும் கைது செய்துள்ளனர்.

குறித்த நபரிடம் மேற்கொள்ளப்பட்டுவரும் மேலதிக விசாரணைகளின் பின்னர் முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பொலிசார் மேலும் தெரிவித்துள்ளனர்.

(Visited 14 times, 1 visits today)

Mithu

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்