ஜெர்மனியில் பகுதி நேர வேலை செய்பவர்களுக்கு வெளியான தகவல்
ஜெர்மனியில் பகுதி நேர வேலை நடைமுறையை நீக்கப்படுவதற்கான ஒரு பிரேரணை முன்வைப்பது தொடர்பான கருத்துக்கள் வெளியிடப்பட்டு வருகின்றது.
ஜெர்மனியில் தற்பொழுது MINI Job இல் ஒருவர் மாதம் ஒன்றுக்கு 520 யுரோ உழைக்க வேண்டும். தற்பொழுது 7.6 மில்லியன் பேர் இந்த MINI Job ஐ செய்து வருவதாக புள்ளி விபரம் தெரியவந்துள்ளது.
இதில் 4 மில்லியன் பேர் இந்த பகுதி நேர வேலையை முதன்மையான பகுதி நேர வேலையை தெரிவித்து வருவதாகவும் புள்ளி விபரம் தெரியவந்துள்ளது. இந்நிலையில் MINI Job என்று சொல்லப்படுகின்ற பகுதி நேர வேலையை முற்றாக தடை செய்ய வேண்டும் என்ற கருத்து பலரிடம் பரவி வருகின்றது.
ஜெர்மனியில் டுண்டஸோஷியாஸ் க்ரீக் என்று சொல்லப்படுகின்ற சமூக நீதிமன்றத்தினுடைய முக்கிய நீதிபதியான ரைனல் ஷேகல் என்பவர் கடுமையான கருத்து ஒன்றை தெரிவித்து இருக்கின்றார்.
அதாவது இந்த MINI Job இன் மூலம் வேலை செய்கிற்வர்கள் வரி செலுத்தும் வீதம் குறைந்து வருவதாகவும், மேலும் இவர்கள் ஓய்வு ஊதியதுக்கான பங்களிப்பை மேற்கொள்கின்றார்கள் என்றும் கூறி இருக்கின்றார்.