போதேயில் எல்லை மீறிய இளம்பெண்… ஆட்டோ ஓட்டுநரை அடித்து உதைத்ததால் பரபரப்பு!
நள்ளிரவில் குடிபோதையில் தாறுமாறாக காரை ஓட்டி வந்த இளம்பெண், ஆட்டோ ஓட்டுநரை சரமாரியாக தாக்கிய சம்பவம் பெங்களூருவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகா தலைநகரான பெங்களூருவில் இப்படியான சம்பவங்கள் அடிக்கடி நடைபெறுகிறது. குடிபோதையில், அரை குறை ஆடை அணிந்த பெண்கள் சாலையில் செல்வோரிடம் தகராறு செய்வதும், கார், பைக்குகளை வேகமாக ஓட்டி வந்து பொதுமக்கள் மீது மோதுவதும் வாடிக்கையாகி விட்டது. அப்படி ஒரு சம்பவம் நேற்று நள்ளிரவும் நடைபெற்றது.
பெங்களூருவில் சஞ்சய் நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் அரைகுறை ஆடை அணிந்த இளம்பெண் குடிபோதையில் காரை வேகமாக ஓட்டி வந்துள்ளார். அப்போது ஆட்டோ ஓட்டுநர் ரெஜி என்பவர், காரை பார்த்து ஓட்டிச் செல்லுங்கள் என்று கூறியுள்ளார்.
இதனால் காரில் இருந்து இறங்கி வந்த இளம்பெண், ஆட்டோ ஓட்டுநர் ரெஜியின் சட்டையைப் பிடித்து கன்னத்தில் அறைய ஆரம்பித்தார். மேலும் ஆபாச வார்த்தைகளால் ரெஜியைத் திட்டியதுடன் சுட்டுக் கொன்று விடுவேன் என்று மிரட்டியுள்ளார். எல்லைமீறிய குடிபோதையில் இருந்த இளம்பெண் மிகக்குறைவான அளவில் ஆடை அணிந்திருந்ததால் அப்பகுதியில் ஏராளமானோர் திரண்டு இந்த நிகழ்வை வேடிக்கை பார்த்துள்ளனர். இந்த சம்பவத்தை அவ்வழியாக சென்ற வாகன ஓட்டி ஒருவர், வீடியோவாக எடுத்துள்ளார்.
நள்ளிரவில் இதுபோன்று குடிபோதையில் அட்டகாசம் செய்பவர்கள் மீது, பெங்களூரு நகர காவல் துறை ஆணையர் தயானந்த் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.