பிரிட்டிஷ் அருங்காட்சியக கண்காணிப்பாளருக்கு எதிராக வழக்கு தாக்கல் : நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!
பிரிட்டிஷ் அருங்காட்சியகம் தனது சேகரிப்பில் இருந்து நூற்றுக்கணக்கான தொல்பொருட்களைத் திருடி ஆன்லைனில் விற்பனைக்கு வழங்கியதாகக் கூறப்படும் முன்னாள் கண்காணிப்பாளருக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஜூலை 2023 இல் 1,800 க்கும் மேற்பட்ட பொருட்கள் காணாமல் போனதைக் கண்டறிந்த பின்னர் பணிநீக்கம் செய்யப்பட்ட பீட்டர் ஹிக்ஸ் மீது அருங்காட்சியகம் வழக்குத் தொடர்ந்தது.
இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அருங்காட்சியகத்தின் வழக்கறிஞர்கள், ஹிக்ஸ் ஒரு தசாப்த காலப்பகுதியில் ஸ்டோர்ரூம்களில் இருந்து பழங்கால ரத்தினங்கள், தங்க நகைகள் மற்றும் பிற பொருட்களை திருடுவதற்காக “தனது நம்பிக்கையின் நிலையை துஷ்பிரயோகம் செய்தார்” எனத் தெரிவித்துள்ளனர்.
உயர் நீதிமன்ற நீதிபதி ஹீதர் வில்லியம்ஸ், நான்கு வாரங்களுக்குள் தன்னிடம் உள்ள பொருட்களைப் பட்டியலிட அல்லது திருப்பித் தருமாறு ஹிக்ஸ்க்கு உத்தரவிட்டார்.
இதுவரை காணாமல் போன பொருட்களில் 356 பொருட்களை மீட்டுள்ளதாகவும், மேலும் பலவற்றை திரும்பப் பெறுவோம் என்றும் அருங்காட்சியகம் கூறுகிறது.
அருங்காட்சியகத்தில் இருந்து திருடப்பட்ட பொருட்கள் கலாச்சார மற்றும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தவை” என்று அருங்காட்சியக வழக்கறிஞர் டேனியல் பர்கெஸ் எழுத்துப்பூர்வ சட்ட வாதங்களில் கூறியுள்ளார்.
இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக அருங்காட்சியகத்தின் கிரீஸ் மற்றும் ரோம் துறையில் பணியாற்றிய ஹிக்ஸ், குற்றச்சாட்டுகளை மறுத்து, அருங்காட்சியகத்தின் சட்டப்பூர்வ கோரிக்கையை மறுக்க விரும்புகின்றமை குறிப்பிடத்தக்கது.