ஆசியா

பாகிஸ்தானில் 2ஆவது பெரிய விமானப்படை தளம் மீது தாக்குதல் – பலர் உயிரிழப்பு!

பாகிஸ்தானின் துர்பத்தில் அந்நாட்டின் 2-வது பெரிய கடற்படை, விமானப்படை தளம் உள்ளது. இந்த விமானப்படை தளத்துக்குள் பயங்கரவாதிகள் புகுந்து தாக்குதல் நடத்தினர். துப்பாக்கியால் சுட்டும், வெடிகுண்டுகளை வீசியும் தாக்குதல் நடத்தினர். இதையடுத்து அங்கு ராணுவத்தினர் விரைந்து சென்றனர்.

இந்த தாக்குதலுக்கு பலுசிஸ்தான் விடுதலை இயக்கத்தின் மஜீத் ராணுவப்பிரிவு பொறுப்பேற்றுள்ளது. இது தொடர்பாக அந்த இயக்கம் கூறும்போது, விமானப்படை தளத்துக்குள் போராளிகள் தாக்குதல் நடத்தினர் இதில் பலர் பலியானதாக தெரிவித்துள்ளது.

Pakistan second-largest naval airbase attacked; Balochistan Liberation Army  claims responsibility - Times of India

இந்த விமானப்படை தளத்தில் சீனாவின் டிரோன்கள் உள்ளிட்ட பல்வேறு ஆயுதங்கள் உள்ளன. பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள இயற்கை வளங்களை சீனாவும், பாகிஸ்தானும் சுரண்டுவதாக பலுசிஸ்தான் விடுதலை இயக்கம் குற்றம்சாட்டி வருகிறது.

சீன முதலீடுகளை கடுமையாக எதிர்த்து வரும் அந்த இயக்கம் அடிக்கடி தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது. சமீபத்தில் குவாதர் துறைமுகத்தில் தாக்குதல் நடத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

(Visited 20 times, 1 visits today)

Mithu

About Author

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்
error: Content is protected !!