வேல்ஸ் இளவரசிக்கு எதிராக அவதூறுகளைப் பரப்பும் சீனா – ரஷ்யா
சீனா, ரஷ்யா மற்றும் ஈரான் ஆகியவை நாட்டை சீர்குலைப்பதற்காக வேல்ஸ் இளவரசி பற்றிய தவறான தகவல்களை பரப்புவதாக வைட்ஹால் வட்டாரங்கள் நம்புகின்றன.
இளவரசியின் உடல்நிலை தொடர்பில் ஒன்லைன் வதந்திகள் பரவுவதற்குப் பின்னால் எதிர்ப்பு நாட்டு அரசாங்கங்கள் இருப்பதாக அரசாங்கத்தின் மூத்த நபர்கள் அஞ்சுகின்றனர்.
வெள்ளிக்கிழமை மாலை இளவரசி தனது புற்றுநோயைக் கண்டறிந்ததை அறிவித்த பிறகு, சமீபத்திய வாரங்களில் ஒன்லைனில் அவரை குறிவைத்து பரபரப்பப்படும் சமூக ஊடக நகைச்சுவைகளுக்கு பிரதமர் ரிஷி சுனக் கண்டனம் வெளியிட்டுள்ளார்.
ஆனால் அவரது தலையீடு மேலும் கேலி வர்ணனையைத் தடுக்கவில்லை, ஞாயிற்றுக்கிழமை இளவரசி தனது நோய் தொடர்பான தகவலை வெளியிட்டிருந்தார்.
புற்றுநோய் தொடர்பில் பகிரங்கமாக வெளிப்படுத்தாததற்காக அவரை விமர்சிக்கும் கேலி பதிவுகள் மீண்டும் உயிர் பெற்றுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.