சிங்கப்பூரில் சாலை விபத்தில் 45 வயது மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் பலி

சிங்கப்பூர்-துவாஸ் என்ற இடத்தில் லொறி மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த 45 வயதுடைய நபர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
வினவல்களுக்குப் பதிலளித்த காவல்துறையும் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையும் மார்ச் ஜாலான் அஹ்மத் இப்ராஹிம் மற்றும் துவாஸ் வெஸ்ட் ரோடு சந்திப்பில் இரண்டு வாகனங்கள் விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்பட்டது.
Ng Teng Fong பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட போது மோட்டார் சைக்கிள் ஓட்டியவர் சுயநினைவின்றி இருந்ததாகவும், பின்னர் அவர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவித்தனர்.
லொறியின் சாரதியான 25 வயதுடைய நபர் ஒருவர் ஆபத்தான முறையில் வாகனம் செலுத்தி உயிரிழப்பை ஏற்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
(Visited 15 times, 1 visits today)